உ.பி.,யில் அரிய வகை சாதனை: போலீஸ் தேர்வில் ஒரே கிராமத்தை சேர்ந்த 26 இளைஞர்கள் தேர்ச்சி
உ.பி.,யில் அரிய வகை சாதனை: போலீஸ் தேர்வில் ஒரே கிராமத்தை சேர்ந்த 26 இளைஞர்கள் தேர்ச்சி
ADDED : நவ 22, 2024 08:33 PM

லக்னோ: உ.பி.,யில் போலீஸ் வேலைக்கு ஒரே கிராமத்தை சேர்ந்த 26 இளைஞர்கள் அடுத்துச் சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
உ.பி.,யில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், l 1,74316 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 26 பேர் முசாபர்நகரின் கசம்போர் கோலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இக்கிராமத்தை சேர்ந்த 70 பேர் எழுதியதில் 26 பேர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அரசு போட்டித் தேர்வில் நடந்த இந்த அரிய சாதனையை கண்டு அக்கிராமத்தின் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் யூடியூப் பார்த்து தேர்வுக்கு தயாரானதாக கூறுகின்றனர். அதில் நடந்த பயிற்சி வகுப்புகள், தேர்வு முறை, தயாராவது எப்படி என்பது குறித்து தெரிந்து கொண்டதாக கூறுகின்றனர்.
அடுத்ததாக இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.இந்த சாதனை குறித்த தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவி உள்ளது. இதனை பின்பற்றி அடுத்து நடக்க உள்ள தேர்வுகளுக்கு தயாராக போவதாக கூறுகின்றனர்.