ராஜஸ்தானில் சோகம்; பயிற்சியின்போது பெண் பவர்லிப்டர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் சோகம்; பயிற்சியின்போது பெண் பவர்லிப்டர் உயிரிழப்பு
ADDED : பிப் 20, 2025 09:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், 17 வயது பவர்லிப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா பயிற்சியின்போது, 270 கிலோ எடையை தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17 வயது வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா. இவர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தலைக்கு மேல் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது. பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.