தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஏப்.24 முதல் பாகிஸ்தானை சேர்ந்த 537 பேர் வெளியேற்றம்

ஏப்.24 முதல் பாகிஸ்தானை சேர்ந்த 537 பேர் வெளியேற்றம்

ஏப்.24 முதல் பாகிஸ்தானை சேர்ந்த 537 பேர் வெளியேற்றம்


UPDATED : ஏப் 27, 2025 05:54 PM

ADDED : ஏப் 27, 2025 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2025 05:54 PM ADDED : ஏப் 27, 2025 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமிர்தசரஸ்: கடந்த ஏப்.24 முதல் எல்லைப்பகுதியான அட்டாரி வழியாக, பாகிஸ்தானை சேர்ந்த 537 பேர் வெளியேறி உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி,காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து,பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

இது குறித்து அட்டாரி எல்லை நெறிமுறை அதிகாரி அருண் பால் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் 24 முதல் அட்டாரி-வாகா எல்லைப் புள்ளி வழியாக சுமார் 537 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். அதே போல, 850 இந்தியர்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி உள்ளனர்.

பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 29 வரை எல்லையைக் கடக்க அவகாசம் உள்ளது. அதே போல இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் ஏப்.29 வரை தாயகம் திரும்ப அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அருண் பால் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us