தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திருவனந்தபுரத்தில் இருந்து பஹ்ரைன், ரியாத்துக்கு 27 முதல் நேரடி விமானம்

திருவனந்தபுரத்தில் இருந்து பஹ்ரைன், ரியாத்துக்கு 27 முதல் நேரடி விமானம்

திருவனந்தபுரத்தில் இருந்து பஹ்ரைன், ரியாத்துக்கு 27 முதல் நேரடி விமானம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 09:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: சவுதி அரேபியா தலைநகரான ரியாத் மற்றும் பஹ்ரைனுக்கு வரும் 27 தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் நேரடி விமான சேவைகளை துவக்குகிறது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா, தோஹா, மஸ்கட் குவைத், தம்மாம் போன்ற பகுதிகளுக்கு கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து வாரத்தில் 250 முறை விமான சேவை உள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கு நேரடி விமான சேவை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வரும் 27ம் தேதி முதல் ரியாத் மற்றும் மற்றொரு மேற்காசிய நாடான பஹ்ரைனுக்கு, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் நேரடி விமான சேவையை துவங்குகிறது.

இது தொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத்துக்கு, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நேரடி விமான சேவை செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும். ஏற்கனவே சவுதி அரேபியாவின் தம்மாமுக்கு தினசரி, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை உள்ளது.

இதேபோல் பஹ்ரைனுக்கு வியாழன், சனி ஆகிய இருநாட்கள், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நேரடி விமான சேவை துவங்கப்படுகிறது. ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருந்து பஹ்ரைனுக்கு தினமும், ‘கல்ப்’ விமான சேவை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us