28,000 சிறுமியர் கர்ப்பம் கர்நாடகாவில் அதிர்ச்சி தகவல்
28,000 சிறுமியர் கர்ப்பம் கர்நாடகாவில் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜன 12, 2024 11:20 PM
பெங்களூரு: கர்நாடகாவில் 11 மாதங்களில், 28,657 சிறுமியர் கருவுற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய சுகாதார துறையின், சந்தான விருத்தி மற்றும் குழந்தை ஆரோக்கிய பிரிவு சார்பில், சிறுமியர் கர்ப்பம் தரித்துள்ளது தொடர்பாக கர்நாடகாவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, 2023 ஜனவரி முதல், நவம்பர் வரை 11 மாதங்களில், 28,657 சிறுமியர் கருவுற்றது தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, பெங்களூரில் 2,815 சிறுமியர் கருவுற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெலகாவியில் 2,254; விஜயபுராவில் 2,004 சிறுமியர் கருவுற்று முறையே இரண்டு, மூன்றாம் இடத்தில் உள்ளன.
குறைந்தபட்சமாக, உடுப்பியில் 56 சிறுமியர் கர்ப்பம் தரித்துள்ளனர்.
குறிப்பாக, 14 வயது சிறுமியர் 168; 15 வயது சிறுமியர் 390; 16 வயது சிறுமியர் 1,150; 17 வயது சிறுமியர் 4,388; 17 வயது சிறுமியர் 22,561; 18 வயது சிறுமியர் 28,657 பேர் அடங்குவர்.
இது குறித்து, கர்நாடகா குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சசிதர் கோசம்பே கூறியதாவது:
கர்நாடகாவில், கிராமம் முதல், மாநிலம் வரை 59 ஆயிரம் குழந்தை திருமணம் தடுப்பு அதிகாரிகள் உள்ளனர்.
இவர்கள் சரியாக செயல்பட்டிருந்தால், குழந்தை திருமணங்களை தடுத்திருக்க முடியும்.
உடல் அளவிலும், மனதளவிலும் வளர்ச்சி அடையாமல் திருமணம் செய்வதால், சிறுமியர் பல்வேறு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். சிறுமியர் கர்ப்பம் தரித்தால், ரத்தசோகை, சத்துணவு குறைவால் அவதிப்படுவர்.
இதனால், தாய், சேய் இறப்பு சம்பவங்கள் அதிகமாகும். எனவே அதிகாரிகள் முறையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.