காதலர் தினம் கொண்டாட்டம் 2.9 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி
காதலர் தினம் கொண்டாட்டம் 2.9 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி
ADDED : பிப் 16, 2024 07:14 AM
பெங்களூரு: காதலர் தினத்தை முன்னிட்டு, 2.9 கோடி ரோஜாக்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
பெங்களூரில் விளையும் ரோஜாக்களுக்கு, வெளிநாடுகளில் அதிகமான மவுசு உள்ளது.
ஆண்டுதோறும் காதலர் தின நேரத்தில், இங்கிருந்து ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.
அதே போன்று, நடப்பாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, 2.9 கோடி ரோஜா பூக்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகின.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், மலேஷியா, குவைத், மணிலா, சார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும், டில்லி, கோல்கட்டா, மும்பை, குவாஹத்தி, ஜெய்ப்பூர் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், பெங்களூரில் இருந்து ரோஜா பூக்கள் ஏற்றுமதி ஆகின.
கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், ரோஜா பூக்களின் ஏற்றுமதி 108 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.