தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேர் கைது; ரூ.16 லட்சம் பறிமுதல்

 துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேர் கைது; ரூ.16 லட்சம் பறிமுதல்

 துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேர் கைது; ரூ.16 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 23, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: துப்பாக்கி முனையில், 23 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

டில்லி கிஷன்கஞ்ச்சில் உள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றுபவர் குல்தீப் சர்மா, 28. பிப்ரவரி 23ம் தேதி கேசவ்புரத்தில் பணம் வசூல் செய்து கொண்டு பைக்கில் அலுவலகத்துக்கு சென்றார்.

வடக்கு டில்லி சாஸ்திரி நகர் மெட்ரோ நிலையம் அருகே இரவு 7:40 மணிக்கு, பைக்கில் வந்த இருவர் வழிமறித்தனர்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, குல்தீபிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பணம் வசூல் செய்து விட்டு, வந்து கொண்டிருந்த குல்தீப் சர்மாவை பின்தொடர்ந்து கொள்ளையரும் பைக்கில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கொள்ளையரில் ஒருவரான மோனு, 31, கடந்த 9ம் தேதி பால்ஸ்வா பால்பண்ணை அருகே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் 3.95 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

போக்குவரத்து நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடப்பது குறித்த தகவல் கிடைத்ததால், மோனு தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டியுள்ளார்.

கொள்ளையடிக்க தேவையான துப்பாக்கி மற்றும் பைக் ஆகியவற்றையும் மோனுவே ஏற்பாடு செய்துள்ளார்.

மோனுவிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அவரது கூட்டாளி சந்தீப்,39, கடந்த 19ம் தேதி மங்கோல்புரியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தீப் அளித்த தகவல்படி மற்றொரு கூட்டாளி சாகர்,30, கைது செய்யப்பட்டு 7 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

கொள்ளையடித்த 23 லட்சம் ரூபாயில், இதுவரை 15.95 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கலாராமை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us