கார் மோதி கரூர் ஐய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலத்த காயம்
கார் மோதி கரூர் ஐய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலத்த காயம்
ADDED : டிச 17, 2024 07:32 AM
மூணாறு; இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே கார் மோதி கரூரைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தமிழகம், கரூரை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் 18 பேர் கொண்ட குழு சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் வழியில் உணவு அருந்துவதற்காக வண்டிபெரியாறு அருகே மஞ்சுமலை வி.ஏ.ஓ., அலுவலகம் பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மாலை 6:30 மணிக்கு வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது குமுளி 6ம் மைல் பகுதியை நோக்கிச் சென்ற கார் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
அதில் கரூரை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் செல்வம் 58, தமிழ்வாணன் 24, சந்திரகுமார் 28, ஆகியோர் கார் மோதி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் வண்டிபெரியாறு கூட்டுறவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வண்டிபெரியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.