ADDED : ஜன 22, 2025 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தெற்கு டில்லியில் முன்பகை காரணமாக, 23 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு டில்லி மாதங்கிர் பகுதியைச் சேர்ந்தவர் முகுல்,23. இவருக்கும் பக்கத்து வீட்டினருக்கும் இடையே முன்பகை இருந்தது.
நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு, முகுலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் தன் இரண்டு நண்பர்களுடன் முகுலிடம் வாக்குவாதம் செய்தான். திடீரென கத்தியால் முகுலை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 சிறுவர்களையும் கைது செய்தனர். மூவரிடமும் விசாரணை நடக்கிறது.

