உ.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பலி
உ.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பலி
ADDED : ஜூன் 28, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா: உ.பி.யில் பெய்து வரும் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தலைநகர் டில்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெருநகரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கனமழையால் சுவர் இடிந்துவிழுந்தது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.