ADDED : மார் 14, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ம.ஜ.த.,வுக்கு 3 தொகுதிகள்
ஹாசனில் ம.ஜ.த., தொண்டர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்று பேசினார்.
பின், அவர் கூறியதாவது:
நான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஒரே குடும்பத்தில் பலர் அரசியலில் உள்ளனர். ஆனால், தேவகவுடா குடும்பம் பற்றி மட்டுமே பலரும் பேசுகின்றனர்.
என் சகோதரி கணவர் மஞ்சுநாத், தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பவில்லை. அவரது 17 ஆண்டுகள் மருத்துவ சேவையை அறிந்து, ஊடகத்தினரே அவரை தேர்தலில் போட்டியிடும்படி வலியுறுத்தினர்.
ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய மூன்று தொகுதிகளில் ம.ஜ.த., வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2 - 3 தொகுதிகள் கூடுதலாக கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

