உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 14, 2026 10:36 PM
ADDED : அக் 14, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் போச்சும் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
படிக்கட்டு பகுதி வழியாக தீ மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியது. இந்த விபத்தில், குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசித்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் என, மூன்று பேர் உயிரிழந்தவர். இந்தியாவைச் சேர்ந்த அவர்கள், 25 - 27 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
