ADDED : அக் 29, 2025 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மேத்தா, அவ்னீஷ் ஜிங்கன் மற்றும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் சுதா ஆகிய மூவரும் டில்லி உயர் நீதிமன்றத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டனர்.
இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மூவரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதிகள் வி.காமேஸ்வர் ராவ், நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, விவேக் சவுத்ரி, ஓம் பிரகாஷ் சுக்லா, அனில் சேதர்பால் மற்றும் அருண் குமார் மோங்கா ஆகிய ஆறு பேர், பிற உயர்நீதிமன்றங்களிலிருந்து மாற்றப்பட்டு, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சமீபத்தில் பதவியேற்றனர்.

