10 ஆண்டுகளில் 3 திருமணம் செய்து மோசடி; கில்லாடி பெண்ணை கைது செய்தது போலீஸ்!
10 ஆண்டுகளில் 3 திருமணம் செய்து மோசடி; கில்லாடி பெண்ணை கைது செய்தது போலீஸ்!
ADDED : டிச 23, 2024 12:44 PM

டேராடூன்: 10 ஆண்டுகளுக்களில் 3 பேரை திருமணம் செய்து விட்டு, பின்னர் விவாகரத்து செய்து, அவர்களிடம் இருந்து செட்டில்மென்ட் என்ற பெயரில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்த உத்தரகண்ட் மாநில பெண் சீமா போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் நிக்கி என்ற சீமா. இவர் கடந்த 2013ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சிறிது நாட்களில் மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த நபரை விவாகரத்து செய்து விட்டார். அந்த நபரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி செட்டில்மென்ட் என்ற பெயரில் ரூ.75 லட்சம் பெற்றார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, 2017ம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு சாப்ட்வேர் டெலவல்பர் வேலை செய்யும் நபரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபரை விவாகரத்து செய்து விட்டு, செட்டில்மென்ட் என்ற பெயரில் ரூ.10 லட்சம் பெற்றார்.
பின்னர் அவர் 2023ம் ஆண்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நபரின் வீட்டில் இருந்து ரூ. 36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்து ஜெய்ப்பூர் போலீசார் சீமாவை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், சீமா 10 ஆண்டுகளுக்களில் 3 பேரை திருமணம் செய்து விட்டு, பின்னர் விவாகரத்து செய்து, அவர்களிடம் இருந்து செட்டில்மென்ட் என்ற பெயரில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்தது தெரியவந்துள்ளது. பொதுவாக பணக்கார ஆண்கள், மனைவியிடம் இருந்து பிரிந்து வாழும் ஆண்கள் ஆகியோரை குறிவைத்து சீமா கல்யாணம் செய்து கொண்டு பணத்தை வசூலித்தது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.