டிராக்டர் மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
டிராக்டர் மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
ADDED : ஜன 18, 2024 04:57 AM

தாவணகெரே: டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
தாவணகெரே சன்னகிரி குல்லேனஹள்ளி கிராம பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆம்னி கார் வேகமாக சென்றது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடியது. அந்த சாலையில் சென்ற டிராக்டரின், பின்பக்கம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
விபத்து குறித்து டிராக்டர் டிரைவர், சன்னகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் இறந்தது தெரிந்தது. இருவர் உயிருக்கு போராடினார். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் சன்னகிரி நரஷெட்டிஹள்ளி கிராமத்தின் ருத்ரேஷப்பா, 64, மல்லிகார்ஜுன், 62, கங்கம்மா, 80 என்பது தெரிந்தது.
படுகாயம் அடைந்தவர்கள் பெயர்கள் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர்.
சந்தேபென்னுாரில் இருந்து சன்னகிரி நோக்கி, காரில் சென்றபோது, விபத்து நேர்ந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.