பாலக்காடு அருகே கார் விபத்து மாணவர் உட்பட 3 பேர் பலி
பாலக்காடு அருகே கார் விபத்து மாணவர் உட்பட 3 பேர் பலி
ADDED : நவ 10, 2025 01:18 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே கார் விபத்துக்குள்ளானதில், கல்லுாரி மாணவர் உட்பட, மூவர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் ரோஹன் ரஞ்சித், 24; ஐ.டி., ஊழியர். இவரது நண்பர்களான ரோஹன் சந்தோஷ், 22, மெக்கானிக்; சனுாஷ், 19, பொறியியல் மாணவர்; ஆதித்யன், 23, இன்ஜினியர்; ரிஷி, 24, ஐ.டி., ஊழியர்; ஜிதின், 21; முதுகலை மாணவர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, காரில் பயணம் சென்றனர்.
இரவு 11:00 மணியளவில் பாலக்காடில் இருந்து சித்துார் சென்று, அங்கிருந்து, பாலக்காடு நோக்கி வந்தபோது, கல்லிங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள வயலில் பாய்ந்தது.
இந்த விபத்தில், ரோஹன் ரஞ்சித், ரோஹன் சந்தோஷ், சனுாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார், உயிரிழந்த மூவரின் உடலை மீட்டனர். மேலும், காயமடைந்த ஆதித்யன், ரிஷி, ஜிதின் ஆகிய மூவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

