கேஜிஎப் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி
கேஜிஎப் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைத்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலி
UPDATED : ஜன 08, 2024 06:14 PM
ADDED : ஜன 08, 2024 06:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைக்க போய் மூன்று ரசிகர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனர்.
கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யஷுக்கு இன்று(ஜன.,08) பிறந்தநாள். இதனால் கடக் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன்(வயது21), முரளி(வயது 20), நவீன் காஜி(வயது19) உள்பட 10 பேர் கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ஹனமந்த ஹரிஜன், முரளி, நவீன் காஜி ஆகிய 3 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.