ADDED : பிப் 10, 2024 12:56 AM
புதுடில்லி:குஜராத், ஹரியானா மற்றும் கோவா மாநிலங்களுக்கான லோக்சபா வேட்பாளர்களை முடிவு செய்ய வரும் 13ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடுகிறது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலர் சந்தீப் பதக் கூறியதாவது:
குஜராத், கோவா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்காகன் லோக்சபா தொகுதி வேட்பாளர்களை முடிவு செய்ய, கட்சியின் அரசியல் விவகாரக் குழு வரும் 13ம் தேதி கூடி ஆலோசிக்கிறது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று முன் தினம், அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதியில் மனோஜ் தனோஹர், குவாஹத்தி - பாபன் சவுத்ரி மற்றும் சோனித்பூர் - ரிஷி ராஜ் ஆகியோர் போட்டியிடுவர் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
முன்னதாக டில்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால், குஜராத் மாநிலம் பரூச் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சைதர் வாசவா போட்டியிடுவார் என, அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.