தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!


UPDATED : ஜூலை 28, 2025 01:41 PM

ADDED : ஜூலை 28, 2025 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2025 01:41 PM ADDED : ஜூலை 28, 2025 01:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: பஹல்காமில் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை கண்டறிந்த ராணுவம், 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளது. இந்த ஆபரேஷனுக்கு 'ஆபரேஷன் மகாதேவ்' என ராணுவம் பெயர் சூட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில், ஸ்ரீநகரில் உள்ள லிட்வாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.

அப்போது, போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷனுக்கு 'ஆபரேஷன் மகாதேவ்' என ராணுவம் பெயர் சூட்டியுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். காஷ்மீரில் பஹல்காம், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us