ADDED : மார் 18, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மேற்கு டில்லி முண்ட்காவில் ஒரு வீட்டில் கடந்த 16ம் தேதி 20 தங்க நகைகள், 33 வெள்ளி நாணயங்கள், ஒரு வெள்ளி மோதிரம், இரண்டு 'லேப் - டாப்'கள், ஒரு மொபைல் போன் ஆகியவை திருடு போயின.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், ஹரியானா மாநிலம் பஹதுர்கரைச் சேர்ந்த சுமித்,24, கவுரவ்,22 மற்றும் கிர்வார் சிங்,39, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.