3 வயது குழந்தை திடீர் மாயம் தந்தையும் மாயமானதால் பீதி
3 வயது குழந்தை திடீர் மாயம் தந்தையும் மாயமானதால் பீதி
ADDED : ஜூன் 10, 2025 09:14 PM
புதுடில்லி:உ.பி.,யில் நான்கு நாட்களுக்கு முன், 3 வயதான பெண் குழந்தை மாயமான நிலையில், அந்த குழந்தையின் தந்தையும் இப்போது மாயமாகிவிட்டார். இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உ.பி.,யின் கோரக்பூர் அருகே உள்ள பிப்ராச் என்ற கிராமத்தை சேர்ந்த நித்யா, 3, என்ற சிறுமியை, கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை. அந்த ஊருக்கு அருகில் உள்ள அம்பேத்கார் நகர் என்ற பகுதியில் உள்ள அந்த குழந்தையின் தாத்தா வீட்டில் நின்றிருந்த குழந்தையை காணவில்லை.
இதுகுறித்து விசாரித்த போலீசார், அந்த குழந்தையின் தந்தை ஜோகேந்திராயை தேடினர். ஆனால், அவர் போலீசுக்கு பிடி கொடுக்காமல் இருந்தார். அதற்கு ஏற்ப, போலீஸ் விசாரணை வளையத்திலிருந்து அந்த நபர், தப்பி வந்தார். எந்த சூழ்நிலையிலும் போலீசுக்கு பிடி கொடுக்காமல் இருந்தார்.
அவர் நேற்று முன்தினம் முதல், திடீரென மாயமானார். கூலித் தொழிலாளியான அவரை போலீசார், தேடி வருகின்றனர். எனவே, அவர் தான் அந்த குழந்தையை கொன்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த குழந்தையின் தாய் ராதிகாவும், பாட்டி கீதா தேவியும், ஜோகேந்திரா எங்கு சென்றிருப்பார் என தெரியாமல் உள்ளனர்.
அவர் ஏன், தன் குழந்தையை கொன்றிருக்க வேண்டும் என்பது தெரியாமல், விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இதையடுத்து, போலீசார் இருவர் மாயம் என வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.