நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் வருத்தம்
நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் வருத்தம்
UPDATED : ஜன 31, 2024 03:03 PM
ADDED : ஜன 31, 2024 12:11 PM

புதுடில்லி: பா.ஜ., நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வருவாயை பா.ஜ., இரட்டிப்பாக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை.
கடந்த 2014ம் ஆண்டை விட விவசாயிகளின் கடன் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. பா.ஜ., கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. பா.ஜ., நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பங்கான ரூ.2700 கோடியை நிறுத்தி வைத்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ரூ. 40,000 கோடி லாபம் பார்க்கின்றன. முறையான குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால் விலை உயர்ந்த உரங்கள் மற்றும் விதைகளை பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் உள்ளது.
விவசாய செலவுகளைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயிப்பது தான் காங்கிரசின் குறிக்கோள். விவசாயிகள் செழிப்படைய அவர்கள் பொருளாதாரத்தில் வளர்வதே வழி. நமது அரசு விவசாயிகளுக்கான அரசாக இருக்கும் தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது. இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.