ADDED : ஜன 29, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட்; அரிசி லாரியில் எதிர்பாராமல் தீப்பிடித்ததில், 30 டன் அரிசி தீக்கிரையானது.
கொப்பாலின் கங்காவதியில் இருந்து, அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று, மஹாராஷ்டிராவின் கொல்லாபுராவுக்கு நேற்று காலை புறப்பட்டது.
பாகல்கோட், முதோலின், லோகாபுரா கிராமத்தின் அருகில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் டயர் வெடித்தது. அத்துடன், லாரியில் தீப்பிடித்தது.
தீ பிடித்ததும் ஓட்டுனர், லாரியை நிறுத்தி விட்டு கீழே குதித்ததால் உயிர் தப்பினார். லாரியில் தீ மளமளவென பரவி, 30 டன் அரிசி எரிந்து சாம்பலானது.
தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். நெடுஞ்சாலையில் லாரி பற்றி எரிந்ததால், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லோகாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.