தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 30 வயது யானை மரணம்

30 வயது யானை மரணம்

30 வயது யானை மரணம்


ADDED : நவ 30, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் குண்டுகெரே மண்டலத்துக்கு உட்பட்ட பச்சஹள்ளியில், வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது. இதை பார்த்த அவர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில், உதவி வன பாதுகாவலர் சுரேஷ், மண்டல வன அலுவலர் மல்லேஷ் ஆய்வு செய்தனர். கால்நடை துறை டாக்டர் மிர்சா வசீம் ஆய்வு செய்தபோது, யானையின் வாய், ஆசனவாய், காது, வாலில் ரத்தம் கசிந்திருந்தது. இதை பார்த்தபோது, யானைக்கு 'ஆந்த்ராக்ஸ்' நோய் பாதித்து இறந்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இதையடுத்து, யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சில உள் உறுப்புகள் அகற்றப்பட்டு, பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us