ADDED : மார் 03, 2026 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்பட வேண்டிய, 300 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதிகபட்சமாக, இண்டிகோ - 163; ஏர் இந்தியா குழுமம் - 110-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், போர் நடக்கும் வான்வெளியை தவிர்க்க ஓமன், சவுதி அரேபியா மற்றும் எகிப்து வழியாக சுற்றிச் செல்கின்றன. இதனால் பயண நேரம் அதிகரித்துள்ளது.

