சுதந்திர தினத்திற்கு ரெடியாகும் செங்கோட்டை: 700 ஏ.ஐ., கேமராவுடன் போலீஸ் தயார்!
சுதந்திர தினத்திற்கு ரெடியாகும் செங்கோட்டை: 700 ஏ.ஐ., கேமராவுடன் போலீஸ் தயார்!
ADDED : ஆக 13, 2024 02:15 PM

புதுடில்லி: ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லி செங்கோட்டையில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
டில்லி, செங்கோட்டையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாடப்பட உள்ளது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தனது உரையை ஆற்றுகிறார். தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி 700 ஏ.ஐ., அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்களும் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
ஏற்பாடுகள் தயார்...!
விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

