ரூ.3,048 கோடியில் துறைமுகம் உலகளாவிய டெண்டர் அழைப்பு
ரூ.3,048 கோடியில் துறைமுகம் உலகளாவிய டெண்டர் அழைப்பு
ADDED : பிப் 17, 2024 04:59 AM
துறைமுகம், நீர்வழி போக்குவரத்து
l நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் துறைமுகம், ரயில் போக்குவரத்து, விமான நிலையம் உள்ளது. இதன் வளர்ச்சிக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், கர்நாடகா நீர்வழி போக்குவரத்து கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்
l கடலோர மாவட்டங்களில் மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், 1,017 கோடி ரூபாய் செலவில், பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக மாநில அரசின் பங்களிப்பு 530 கோடி ரூபாய். 1,145 கோடி ரூபாய் செலவில், புதிதாக 12 பணிகளுக்காக மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளது
l உத்தர கன்னடா மாவட்டம், கேனியில், அனைத்து வானிலை மாற்றத்திற்கு ஏற்றார்போல, ஆழ்கடல் துறைமுகம் 4,200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
l உத்தர கன்னடா மாவட்டம், பாவினகுருவேயில் 3,048 கோடி ரூபாய் செலவில், துறைமுகம் கட்டுவதற்காக உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
l கார்வார், மல்பே, பழைய மங்களூரு துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
l கார்வார், பழைய மங்களூரு உட்பட 11 சிறிய துறைமுகங்களில், துார்வாரும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்படும்
l கார்வார் துறைமுகத்தில் தீயணைப்பு உபகரணங்கள் நிறுவப்படும்
l குருபுர், நேத்ராவதி ஆறுகளில் வாட்டர் மெட்ரோ சேவை துவங்க, சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.