அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3,2 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3,2 ஆக பதிவு
ADDED : செப் 22, 2025 08:07 AM

சியாங்; அருணாச்சலப்பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் அப்பர் சியாங் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்பட்டதா என்ற எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் பதிவான அப்பர் சியாங் என்பது பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான சியாங் ஆற்றில் மேல்பகுதியில் உள்ள பல்நோக்கு நீர்மின் திட்டத்தை குறிப்பதாகும்.
இந்த பகுதியில் ஏராளமான இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. அதேநேரத்தில் சியாங் ஆற்றில் பெரிய அணை கட்டப்பட்டு வருகிறது. சுமார் 10 பில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும் என்பதோடு, தெற்காசியாவிலேயே பெரிய அணையாக இருக்கும் என்பதால் சியாங் மாவட்டம் அதிக கவனம் பெற்றுள்ளது.