லோக்சபா தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய படை வீரர்களை ஈடுபடுத்த முடிவு
லோக்சபா தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய படை வீரர்களை ஈடுபடுத்த முடிவு
ADDED : பிப் 15, 2024 03:19 PM

புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள லோக்சபா மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படையினரை ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
லோக்சபா மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநில அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், தேர்தல் நடக்கும் நேரம், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படும் அறை, பதற்றமான இடங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அதற்கு தேவையான மத்திய ஆயுதப்படையினர் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
இதன்படி, மே.வங்கத்திற்கு 920 காஷ்மீருக்கு 635சத்தீஸ்கருக்கு 360பீஹாருக்கு 295உ.பி.,க்கு 252ஆந்திரா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தலா 250குஜராத், மணிப்பூர், ராஜஸ்தான், தமிழகத்திற்கு தலா 200ஒடிசாவிற்கு 175அசாம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா 160மஹாராஷ்டிராவிற்கு 150ம.பி.,க்கு 113திரிபுராவிற்கு 100ஹரியானாவிற்கு 95அருணாச்சல பிரதேசத்திற்கு 75கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் டில்லிக்கு தலா 70கேரளாவிற்கு 66லடாக்கிற்கு 57ஹிமாச்சல பிரதேசத்திற்கு 55நாகலாந்துக்கு 48மேகாலயாவிற்கு 45சிக்கிமிற்கு 17மிசோரத்திற்கு 15தாத்ரா நாகர் ஹவேலிக்கு 14கோவாவுக்கு 12சண்டிகருக்கு 11புதுச்சேரிக்கு 10அந்தமானுக்கு 5லட்சத்தீவுக்கு 3 கம்பெனி ஆயுதப்படையினர் தேவை என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி உள்ளது.
இதனையடுத்து சுதந்திரமான மற்றும் நேர்மையான நேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 3,400 கம்பெனி (3.40 லட்சம் வீரர்கள்) மத்திய ஆயுதப்படையினரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேவைக்கு ஏற்பவும், வீரர்களின் இருப்பை பொறுத்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டு உள்ளது.

