"விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது": ராகுல் பேச்சு
"விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது": ராகுல் பேச்சு
UPDATED : ஜன 30, 2024 12:37 PM
ADDED : ஜன 30, 2024 12:35 PM

பாட்னா: ''விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, பீஹார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் பேசியதாவது: விவசாயிகளின் நிலங்களை அரசு பறிக்கிறது. நிலம் பறிக்கப்பட்டு அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்தார். இதற்கு நாட்டின் அனைத்து விவசாயிகளும் எதிர்த்து நின்றது நல்லது. விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது. விவசாயிகளும் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். இருப்பினும் விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற காங்கிரஸ் அரசு முயற்சிக்கும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
முதுகெலும்பு
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று நான் நினைக்கிறேன். கோடீஸ்வரர்களின் 14 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்யவில்லை.
மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறுகிறது. இந்த பிரச்னையை உங்களுக்காக பார்லியில் நான் கேள்வி எழுப்ப முடியும். இதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என உத்தரவாதம் அளிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பிரச்னைளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.