sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"சித்தாந்தம் அடிப்படையில் செயல்படும் பா.ஜ.": நட்டா பேச்சு

/

"சித்தாந்தம் அடிப்படையில் செயல்படும் பா.ஜ.": நட்டா பேச்சு

"சித்தாந்தம் அடிப்படையில் செயல்படும் பா.ஜ.": நட்டா பேச்சு

"சித்தாந்தம் அடிப்படையில் செயல்படும் பா.ஜ.": நட்டா பேச்சு


ADDED : மார் 05, 2024 03:22 PM

Google News

ADDED : மார் 05, 2024 03:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'சித்தாந்தம் அடிப்படையில் செயல்படும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.,' என கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் அக்கட்சி தேசிய தலைவர் நட்டா குறிப்பிட்டார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: பா.ஜ., வினர் தங்களை அதிர்ஷ்டசாலிகளாகக் கருதுகிறார்கள். சித்தாந்த அடிப்படையில் செயல்படும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ., மட்டும் தான். ராமர் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார். நாங்கள் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றினோம்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரவில்லை. கர்நாடகா அரசு தங்கள் நலனுக்காக மக்களின் நலன்களைச் சூறையாடுகிறது. இப்போது கர்நாடக மக்கள் உணர்ந்திருக்கலாம். கர்நாடகாவில் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இங்கு மக்களுக்கு இலவசமாக கிடைத்தால் அது பயங்கரவாதம் தான். மக்கள் நலனுக்காக கர்நாடகா அரசு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us