"இண்டியா கூட்டணிக்கு தொடர்ந்து வீழ்ச்சி": பா.ஜ., தாக்கு
"இண்டியா கூட்டணிக்கு தொடர்ந்து வீழ்ச்சி": பா.ஜ., தாக்கு
ADDED : பிப் 11, 2024 02:22 PM

புதுடில்லி: இண்டியா கூட்டணி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறினார்.
'பஞ்சாபில் உள்ள 13 இடங்களிலும், சண்டிகரில் உள்ள ஒரு இடத்திலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு, இண்டியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
'ஜெய் ஸ்ரீராம்'
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியதாவது: இண்டியா கூட்டணிக்கு இது மற்றொரு பின்னடைவு ஆகும். ஒருபுறம், ராமர் கோயில் கட்டப்பட்டு, மக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுகிறார்கள். மறுபுறம், இண்டியா கூட்டணி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
முரண்பாடு
பஞ்சாபில் இண்டியா கூட்டணி போட்டியிடாது. கூட்டணியின் கட்டமைப்பு சிதைந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணியில் குழப்பம், முரண்பாடு மற்றும் ஊழல் நடந்து வருகிறது. ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை விசித்திரமானது. ராகுல் நியாய யாத்திரைக்கு பதிலாக, கூட்டணி ஒற்றுமை யாத்திரை நடத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

