"ஊழல் என்றால் காங்கிரஸ் தான்" - அமித்ஷா சொல்கிறார்!
"ஊழல் என்றால் காங்கிரஸ் தான்" - அமித்ஷா சொல்கிறார்!
ADDED : பிப் 25, 2024 06:03 PM

போபால்: ஊழல் என்றால் காங்கிரஸ் தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மத்திய பிரதேசம் சத்தர்பூர் நடந்த பூத் தொழிலாளர்கள் மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் அரசு மத்தியப் பிரதேசத்துக்கு ரூ. 1,99,000 கோடி மட்டுமே வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலையிலான பா.ஜ., அரசு வெறும் 9 ஆண்டுகளில் ரூ. 7,74,000 கோடியை மத்தியப் பிரதேசத்துக்கு வழங்கி உள்ளது.
நோய் வாய்ப்பட்டிருந்த மத்தியப் பிரதேசத்தை மீண்டும் உயிர்ப்பித்து வளர்ந்த மாநிலமாக மாற்றியது பா.ஜ.,. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்று பெற்று, இந்தியாவை வல்லரசாக மாற்றும். 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். ஊழல் என்றால் காங்கிரஸ் தான். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

