"மனைவி திட்டினால் இதை செய்யுங்கள்": ஒவைசி அட்வைஸ்
"மனைவி திட்டினால் இதை செய்யுங்கள்": ஒவைசி அட்வைஸ்
UPDATED : பிப் 04, 2024 05:25 PM
ADDED : பிப் 04, 2024 05:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: 'மனைவி உங்களை திட்டினால், தேவையின்றி கோபப்பட வேண்டாம். அவரை அடிப்பது ஆண்மை இல்லை. மனைவியிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும்' என ஏஐஎம்ஐஏ கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவுரை வழங்கி உள்ளார்.
இது குறித்து ஓவைசி கூறியிருப்பதாவது: நான் பல முறை இது பற்றி கூறியிருக்கிறேன். அது பலரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. உண்மையில் மனைவியின் ஊதியத்தில் கணவருக்கு எந்த வித உரிமையும் இல்லை. ஆனால் கணவரின் வருவாயில் மனைவிக்கு உரிமை உள்ளது.
கோபப்படாதீர்கள்
மனைவியிடம் கொடூரத்துடன் நடந்து கொள்பவர்கள், அவர்களை அடிப்பவர்கள் உள்ளனர். மனைவி உங்களை திட்டினால், தேவையின்றி கோபப்பட வேண்டாம். அவரை அடிப்பது ஆண்மை இல்லை. மனைவியிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஓவைசி கூறினார்.