"பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்": பிரதமர் மோடி
"பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்": பிரதமர் மோடி
UPDATED : ஜன 24, 2024 11:24 AM
ADDED : ஜன 24, 2024 11:22 AM

புதுடில்லி: பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் திறமைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுவார்கள். ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வி கற்க, பா.ஜ., பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

