"நான் அதிர்ஷ்டசாலி": ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி பேட்டி
"நான் அதிர்ஷ்டசாலி": ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி பேட்டி
ADDED : ஜன 22, 2024 04:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி: ‛‛நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்'' என ராமர் சிலையை வடிவமைத்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு இன்று (ஜன.,22) நடந்தது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வந்தார். ராமர் சிலையானது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.
அதிர்ஷ்டசாலி
இந்நிலையில், ராமர் சிலையை வடிவமைத்த சிற்பியான அருண் யோகிராஜ் கூறியிருப்பதாவது: ‛‛ நான் இப்போது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனது முன்னோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராமர் ஆகியோரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.