''இந்தியா ஹிந்து நாடல்ல'': கர்நாடக முதல்வர் சித்தராமையா
''இந்தியா ஹிந்து நாடல்ல'': கர்நாடக முதல்வர் சித்தராமையா
ADDED : ஜூன் 27, 2024 01:28 PM

பெங்களூரு: ''இந்தியா ஹிந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், லோக்சபா முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ''இந்தியா ஹிந்து நாடு அல்ல என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு 'ஆம்' என பதிலளித்த சித்தராமையா, ''இந்தியா ஹிந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு'' எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ''பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து சபாநாயகரை இருக்கையில் அமரவைப்பது வழக்கமான மரபுதான். நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல், மக்களின் குரலாக பார்லிமென்டில் செயல்படுவார்,'' என்றார்.