அநீதிக்கு எதிராக "இண்டியா" கூட்டணி போராடும்: ராகுல் பேச்சு
அநீதிக்கு எதிராக "இண்டியா" கூட்டணி போராடும்: ராகுல் பேச்சு
ADDED : ஜன 25, 2024 11:41 AM

கோல்கட்டா: நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி போராடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் நேற்று(ஜன.,24), ராகுல் யாத்திரையை மேற்கொண்டார்.
இதற்கிடையே, ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்குவங்கம் வழியாக இருந்தாலும் கூட, அதுபற்றி எங்களிடம் காங்கிரஸ் எதுவும் பேசவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ராகுலின் யாத்திரை மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் நுழைந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி போராடும். நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் யாத்திரைக்கு பெயர் வைக்கும் போது, நியாய என்ற வார்த்தையை சேர்த்து வைத்துள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார்.