"கட்டட கலையை பிரதிபலிக்கும் இந்திய விமான நிலையங்கள்": மத்திய அமைச்சர் பெருமிதம்
"கட்டட கலையை பிரதிபலிக்கும் இந்திய விமான நிலையங்கள்": மத்திய அமைச்சர் பெருமிதம்
UPDATED : ஜன 29, 2024 10:54 AM
ADDED : ஜன 29, 2024 10:53 AM

புதுடில்லி: ‛‛இந்திய விமான நிலையங்களில் நவீன கட்டட கலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்'' என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய விமான நிலையங்கள் கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, அயோத்தியில் விமான நிலையத்தின் உள்ளே,
ராமரின் வாழ்க்கை பயணம் குறித்து விபரங்கள் கலை வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டு
உள்ளது. அதேபோல் திருச்சி விமான நிலையத்தில் ரங்கநாத சுவாமி கோயில் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், நவீன கட்டட கலையை உருவாக்க முயற்சிக்கிறோம். இது வளரும் கலைஞர்கள் தனது திறமையை வெளிப்படுத்த, உதவியாக அமையும். இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.