எல்லாமே தப்பு: மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு 'குட்டு'
எல்லாமே தப்பு: மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு 'குட்டு'
ADDED : ஆக 31, 2024 07:28 AM

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் உள்ள தகவல்கள் உண்மையாகவே தவறானவை' என மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு மத்திய குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலடி கொடுத்துள்ளார்.
'விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், பாலியல் குற்ற வழக்குகளில் 15 நாட்கள் காலக்கெடுவுக்குள், விசாரணையை முடிக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்து, மம்தாவுக்கு மத்திய குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அனுப்பி உள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது: பிரதமருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் உள்ள தகவல்கள் உண்மையாகவே தவறானது. உங்கள் மாநிலத்தில் விரைவு நீதிமன்றங்கள் செயல்படாமல் இருப்பதை மறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.
போக்சோ வழக்குகள்
மாநிலத்தில். 48,600 வழக்குகள் நிலுவையில் இருந்தும் கற்பழிப்பு மற்றும் போக்சோ வழக்குகளை கையாள்வதற்கு கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றங்களை மேற்குவங்க அரசு செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக உங்கள் கடிதத்தில் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்முறை எழுதிய கடிதத்திற்கு மம்தாவுக்கு விரைவு நீதிமன்றங்களை செயல்படுத்துங்கள் என்று மத்திய அரசு பதிலடி கொடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.