பா.ஜ., எம்.பி.,க்கள் தாக்குதலில் எனக்கும் கால் மூட்டில் காயம்; காங் தலைவர் கார்கே புகார்
பா.ஜ., எம்.பி.,க்கள் தாக்குதலில் எனக்கும் கால் மூட்டில் காயம்; காங் தலைவர் கார்கே புகார்
ADDED : டிச 19, 2024 02:44 PM

புதுடில்லி: பா.ஜ., எம்.பி.க்கள் தள்ளியதால் கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த ஒடிசா எம்.பி., சாரங்கி மண்டை உடைந்தது. இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பா.ஜ., எம்.பி.க்கள் தள்ளியதால் கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது:
இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (டிச.,19) காலை பேரணியில் ஈடுபட்டபோது பா.ஜ., எம்.பி.க்களால் நான் தள்ளப்பட்டேன். இதனால் நான் தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருக்கும் எனது கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொண்டு வந்த நாற்காலியில் அமர்ந்தேன். மிகுந்த சிரமத்துடன் சக எம்பிக்களின் உதவியுடன் காலை 11 மணிக்கு நான் எனது இல்லத்திற்கு திரும்பினேன். என் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ., எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர விட வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.