"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்
"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்
UPDATED : ஜன 18, 2024 04:12 PM
ADDED : ஜன 18, 2024 04:11 PM
புதுடில்லி: ‛‛நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம்'' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் வரும் ஜன.,22ம் தேதி ராமர் கோயிலில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, டில்லியில் விஸ்வாஸ் நகரில் உள்ள பசுபதி நாத் கோயிலில் நட்டா தூய்மைப் பணி மேற்கொண்டார்.
வழிபாட்டுத் தலங்கள்
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் புனிதமான நிகழ்வு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும். நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.