ரூ.99 ஆயிரத்திற்கு லைப்டைம் பானிபூரி ஆபர்; இணையத்தில் வைரல்
ரூ.99 ஆயிரத்திற்கு லைப்டைம் பானிபூரி ஆபர்; இணையத்தில் வைரல்
UPDATED : பிப் 15, 2025 12:56 PM
ADDED : பிப் 15, 2025 12:46 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பானிபூரி விற்பனை செய்யும் வாலிபர் ஒருவர் அறிவித்துள்ள, 99 ஆயிரம் ரூபாய்க்கு, லைப்டைம் பானி பூரி சலுகைத் திட்டம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
பானி பூரி விற்பனை உச்சம் தொட்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் இரவு நேரங்களில் அதிக கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பானிபூரி விற்பனை செய்யும் வாலிபர் ஒருவர் அறிவித்துள்ள, 99 ஆயிரம் ரூபாய்க்கு, வாழ்நாள் முழுவதுக்குமான பானி பூரி சலுகைத் திட்டம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
99 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டால், ஆயுட்காலம் முழுவதும் பானிபூரி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதே அவர் அறிவித்துள்ள சலுகைத் திட்டம். அதேபோல், ஒரேநேரத்தில் 151 பானி பூரிகளை சாப்பிடும் நபருக்கு ரூ.21 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படுகிறது.
இது குறித்து பானிப்பூரி விற்பனையாளர் கூறியதாவது: எங்களிடம் ரூ.1 முதல் ரூ.99 ஆயிரம் வரை பல்வேறு ஆபர்கள் உள்ளன. இவை ஒரு நாள் முதல் வாழ் நாள் முழுவதுமான சலுகைத் திட்டங்கள் உள்ளன. இரண்டு பேர் ஏற்கனவே ரூ.99 ஆயிரம் செலுத்தி வாழ்நாள் சலுகைத் திட்டத்தை பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் எனது வாடிக்கையாளர்களை பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்க விரும்புகிறேன், என்றார்.
இது குறித்து வாடிக்கையாளர் தேஜஸ்வினி கூறியதாவது: நான் இந்த ஸ்டாலை சமூக ஊடகங்களில் பார்த்தேன், சலுகைகளை கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்தேன். நேரில் வந்து பானிபூரியை சாப்பிட்டேன். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, என்றார்.
மற்றொரு வாடிக்கையாளர் கூறுகையில், 'ரூ.195க்கு ஒரு மாதத்திற்கு லைப்டைம் பானி பூரி சலுகை உண்டு. உணவு சுவையாக இருக்கிறது' என தெரிவித்தார்.

