தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு
தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு
ADDED : மார் 20, 2024 04:58 PM

புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.
தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், அச்சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது. பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு எந்த வகையிலும் தடை விதிக்கக்கூடாது. சட்டத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காகவும், இடையூறு செய்யும் நோக்கத்துடனே வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையர்களின் நற்பெயர்ப் பற்றி கேள்வி எழுப்பப்படவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் கமிஷனர்களின் திறன் குறித்தும் கேள்வி எழுப்பவில்லை. அரசியல் சாசனத்தின்படி பதவி வகிக்கும் நபர்களின் தகுதி குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் மனுதாரர்கள், அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதனால், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய அரசு பதிலில் கூறப்பட்டு உள்ளது.

