மக்களின் வலி புரியாத ராகுல்: பீஹார் துணை முதல்வர் விமர்சனம்
மக்களின் வலி புரியாத ராகுல்: பீஹார் துணை முதல்வர் விமர்சனம்
ADDED : ஜன 31, 2024 09:36 AM

பாட்னா: குற்றம் மற்றும் ஊழல் மனநிலை கொண்ட அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களால், பொதுமக்களின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என பீஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா விமர்சித்துள்ளார்.
பீஹாரில் பா.ஜ., ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் கடந்த 29ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் பா.ஜ.,வை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர். இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறுகையில், 'சின்ன அழுத்தம் கொடுத்தால் போதும். நிதீஷ்குமார் 'யு டர்ன்' போட்டு திரும்பி விடுவார்' என விமர்சித்தார்.
இந்நிலையில், பாட்னா நகரில் துணை முதல்வர் விஜய் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த இடத்தின் சமூக மற்றும் புவியியல் நிலைகளை பற்றி ராகுலால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர். கீழ்மட்டத்தில் உள்ளவர்களுடன் நேரம் செலவிட்டு பழகியவர்களுக்கு நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஆனால், குற்றம் மற்றும் ஊழல் மனநிலை கொண்ட அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களால், பொதுமக்களின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.