"அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது" - சொல்கிறார் மம்தா
"அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது" - சொல்கிறார் மம்தா
ADDED : பிப் 18, 2024 02:53 PM

கோல்கட்டா: 'மதச்சார்பின்மை, ஜனநாயகம் அல்லது அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: பாரத நாட்டின் கலாச்சாரம், மொழி, மதம் மற்றும் சமூகத்தின் பன்முகத் தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கு ஒவ்வொரு இந்தியரையும் இணைக்கும் கடின உழைப்பை அரசியலமைப்பு செய்கிறது. நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பதில் நான் பயம் கொள்கிறேன். ஒரு பயங்கரமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண மனிதனாக என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமலாக்கத்துறை
மதச்சார்பின்மை, ஜனநாயகம் அல்லது அரசியலமைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என யாராவது சொன்னால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தினை மாற்ற வேண்டும் என யாராவது சொன்னால், அது குறிப்பிட்ட சிந்தாந்தத்தை திருப்திபடுத்துவதற்காகவே இருக்கும். எனக்கு பேச உரிமை இல்லை. ஒரு வேளை நான் பேசினால் நாளை என் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும். இவ்வாறு அவர் கூறினார்.