"பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்": பா.ஜ., "அட்வைஸ்"
"பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்": பா.ஜ., "அட்வைஸ்"
ADDED : மார் 13, 2024 02:24 PM

புதுடில்லி: 'பதற்றத்தை உருவாக்கி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து டில்லியில் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பறிக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் இந்திய குடிமக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மாநில கட்சிகள் நிறுத்த வேண்டும்.
மேற்குவங்கத்தில் பொய் குற்றச்சாட்டுக்களை மம்தா பானர்ஜி பரப்புகிறார். நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எந்த அளவிற்கு அவர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துன்புறுத்தப் படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கிறது. யாருடைய வேலையோ குடியுரிமையோ பறிக்கப்படாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்.
வாக்கு வங்கி அரசியலுக்காக கெஜ்ரிவால் பேசி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் வெற்றி பெற்றதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக சொல்லி வருகிறார். இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் அவதூறு பரப்புகின்றன?. இவ்வாறு அவர் கூறினார்.

