திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை: பா.ஜ., தாக்கு
திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை: பா.ஜ., தாக்கு
ADDED : ஜன 07, 2024 11:00 AM

புதுடில்லி: திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை உள்ளது என காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்கள் சந்திப்பில்,'' மேற்கு வங்கத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பா.ஜ.,வுக்கு தைரியம் இருந்தால் ஏதாவது செய்ய வேண்டும். மணிப்பூரில் செய்ய முடியவில்லை. மேற்கு வங்கத்தில் எப்படி செய்வார்கள்?. பிரதமர் மோடிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதால் அதைச் செய்ய முடியாது. தன்னை எதிர்த்து லோக்சபா தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
தலிபான் மனநிலை
இதற்கு பதில் அளித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திரிணமுல் காங்கிரசாருக்கு தலிபான் மனநிலை உள்ளது என காங்கிரஸ் கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். காங்.,எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்கத்தில் ஜனாதிபதியை ஆட்சியை கோரியுள்ளார்.
ஒருபுறம் காங்கிரஸ் திரணமுல் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தர்வர்கள் கூறுகின்றனர். இதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல், சோனியா பதில் சொல்ல வேண்டும். இது என்ன கூட்டணி?. இவ்வாறு அவர் கூறினார்.