"குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை": சொல்கிறார் கெஜ்ரிவால்
"குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை": சொல்கிறார் கெஜ்ரிவால்
UPDATED : ஜன 04, 2024 01:58 PM
ADDED : ஜன 04, 2024 12:21 PM

புதுடில்லி: அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
என் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்கு. அமலாக்கத்துறை மூலம் என்னை கைது செய்ய ஆளும் பா.ஜ., முயற்சி செய்கிறது. ஊழல் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை. எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை. அதை அவர்கள் சிதைக்க விரும்புகிறார்கள். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார்கள்.
பா.ஜ.,வில் சேராத அரசியல் தலைவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது. பா.ஜ., வின் நோக்கம் விசாரிப்பது அல்ல. லோக்சபா தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க சதி நடக்கிறது. விசாரணை என்ற பேரில் என்னை கைது செய்ய விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.