"என் மீது அவதூறு பரப்புகின்றனர்": ராகுல் குற்றச்சாட்டு
"என் மீது அவதூறு பரப்புகின்றனர்": ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 24, 2024 11:44 AM
ADDED : ஏப் 24, 2024 11:26 AM

புதுடில்லி: 'பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினர் என் மீது அவதூறு பரப்புகின்றனர்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் நடந்த மாநாட்டில் ராகுல் பேசியதாவது: நான் தீவிரமாக இல்லை. அரசியலில் ஆர்வம் இல்லை என்கிறார்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை கண்டு பிரதமர் மோடி பீதியடைந்துள்ளார். பிரதமர் மோடி பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். இதை நாங்கள் மக்களுக்கு திருப்பி வழங்குவோம்.
ஜாதியின் மீது ஆர்வம் இல்லை
90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை தடுக்க நான் குரல் கொடுத்து வருகிறேன். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினர் என் மீது அவதூறு பரப்புகின்றனர். ராமர் கோயில், புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு அழைப்பில்லை. எனக்கு ஜாதி மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீது தான் ஆர்வம்.
தேசபக்தி
ஊடகங்கள், நீதித்துறை, தனியார் மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்களில் ஓபிசி, தலித் மற்றும் ஆதிவாசிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். ஒரு தேசபக்தியுள்ள நபர் இந்தியாவுக்கு நல்லது செய்ய வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
அதற்காக நாம் 90 சதவீத மக்கள்தொகையின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். பிரதமர் மோடி எல்லோரிடமும், தான் ஓபிசி என்று கூறுகிறார். நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை பேச ஆரம்பித்தபோது, ஜாதி இல்லை என்கிறார். பணக்காரர், ஏழை என இரண்டே ஜாதிகள் என்று சொல்கிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.

